TNPSC Thervupettagam

இஸ்ரோவிலிருந்து SSLV தொழில்நுட்பப் பரிமாற்றம்

June 27 , 2025 7 days 66 0
  • இஸ்ரோவிலிருந்து SSLV தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான ஏலத்தினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் கைப்பற்றியது.
  • இதன் மூலம் இந்நிறுவனமானது சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (SSLV) ஒரே உற்பத்தியாளராகிறது.
  • இதன் முழு தொழில்நுட்பப் பரிமாற்றச் செயல்முறை நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
  • SSLV என்பது இஸ்ரோ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மற்றும் செலவு குறைந்த ஏவுகலம் ஆகும்.
  • இது சிறிய செயற்கைக் கோள்களை புவி தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் விரைவாக உட்செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அவசர செயற்கைக் கோள், குறிப்பாகப் பாதுகாப்புப் பயன்பாட்டிற்கான செயற்கைக் கோள்களின் ஏவுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய SSLV உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்