சமீபத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது ஒரு மில்லியன் என்ற அளவில் இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ ஆலோசனைகளைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
சுகாதாரச் சேவையை ஆன்லைனில் வழங்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது முறை இதுவாகும்.
இது ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் நல மையத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான தொலைதூர மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்துள்ள 2 மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவையாகும்.