TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 2026

May 13 , 2026 16 hrs 0 min 78 0
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி உட்பட) 34-லிருந்து 38-ஆக உயர்த்த, உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா 2026-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திருத்தம் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956-இல் மாற்றத்தைக் கொண்டு வரும்.
  • 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • வழக்குகளின் தேக்கம் அதிகரிப்பு மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள டிஜிட்டல் மின்னணுத் தாக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பின் சரத்து 124(1), ஒரு சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
  • அரசியலமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அசல் எண்ணிக்கை ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஏழு இதர நீதிபதிகள் என இருந்தது.
  • 92,000-க்கும் மேற்பட்ட தேங்கிக்கிடக்கும் வழக்குகளைக் கையாள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்