TNPSC Thervupettagam

Road RADAR முன்னெடுப்பு

May 13 , 2026 16 hrs 0 min 62 0
  • டெல்லியில் தினசரி தரைமட்ட ஆய்வுகள் மூலம் காற்று மாசுக்கான ஆதாரங்களைக் கண்டறிய, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் (DPCC) Road RADAR (சாலைகளில் நிகழ்நேர காற்று மாசுபாடு கண்டறிதல்) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • மாசுபாட்டின் ஆதாரங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, MCD-311 மொபைல் செயலி மூலம் புவிசார் குறியீடு செய்யப்பட்ட அறிக்கையிடல் முறையை இந்தத் திட்டம் பயன்படுத்துகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லி முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 18,000 கி.மீ சாலைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
  • சாலைப் புழுதி, குப்பைகள், உயிரியக்கழிவு எரிப்பு, நெகிழி எரிப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகள் உட்பட 11 வகையான மாசு காரணிகளை Road RADAR கண்காணிக்கிறது.
  • நிகழ்நேரக் கண்காணிப்பு, நிர்வாகப் பொறுப்புக்கூறல் மற்றும் மாசு தொடர்பான புகார்களுக்கு விரைவான தீர்வை வழங்குவதை இந்தத் முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்