2026 ஆம் ஆண்டு மே 8 நிலவரப்படி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) 2.0 என்ற திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டி முடிப்பதில் ஒடிசா முதன்மையான மாநிலமாக உருவெடுத்துள்ளது.
தகுதியுள்ள நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு கான்கிரீட் /நிலையான வீடுகளை வழங்குவதற்காக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் PMAY-U 2.0 தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வீடுகளைக் கட்டி முடிப்பதில் ஒடிசா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஒடிசாவில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 24,625 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதில் சுமார் 23,464 இடங்கள் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்காக புவிசார் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு மே 5 நிலவரப்படி, 3,134 வீடுகளுக்கு அஸ்திவாரப் பணிகள் தொடங்கப்பட்டு, 2,008 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டி புவிசார் குறியீடு, அஸ்திவாரக் கண்காணிப்பு மற்றும் பூர்த்தி கண்காணிப்பு ஆகிய முறைகளை இந்தத் திட்டம் பயன்படுத்துகிறது.