TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட்டில் இடைநிற்றல் இல்லா நிலை

May 13 , 2026 16 hrs 0 min 63 0
  • UDISE+ தரவு மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையின்படி, 2024-25 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலம் ஆரம்பப் பள்ளிகளில் 0% இடைநிற்றல் விகிதத்தைப் பதிவு செய்து உள்ளது.
  • ஜார்க்கண்டின் ஆரம்பப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 2014-15 ஆம் ஆண்டில் 6.41% ஆக இருந்தது, தற்போது 2024-25 ஆம் ஆண்டில் 0% ஆகக் குறைந்துள்ளது.
  • உயர் தொடக்கப் பள்ளி இடைநிற்றல் 7.42%-லிருந்து 1.7% ஆகவும், உயர்நிலைப் பள்ளி இடைநிற்றல் 23.2%-லிருந்து 3.5% ஆகவும் குறைந்துள்ளது.
  • UDISE+ என்பது இந்தியாவில் பள்ளிக் கல்வி புள்ளி விவரங்களுக்காகப் பயன்படுத்தப் படும் தேசிய தரவுத்தளமாகும்.
  • இந்தியாவில் ஆரம்பக் கல்வி என்பது பொதுவாக வகுப்பு I முதல் V வரையிலும், உயர் தொடக்கக் கல்வியானது வகுப்பு VI முதல் VIII வரையிலும் அமையும்.
  • 2024-25 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதில் ஜார்க்கண்ட் தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்