TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை

May 19 , 2026 13 days 119 0
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த அவசரச் சட்டம், 2026-ஐப் பிறப்பித்துள்ளார்.
  • இந்த அவசரச் சட்டம், இந்திய தலைமை நீதிபதி (CJI) தவிர்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக உயர்த்துகிறது; இதன் மூலம் மொத்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34-லிருந்து 38 ஆக உயருகிறது.
  • நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, உடனடி நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 123-வது சரத்தின் கீழ் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திருத்தம், 1956 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் பிரிவு 2-இல் உள்ள "முப்பத்து மூன்று" என்ற வார்த்தைக்குப் பதிலாக "முப்பத்து ஏழு" (thirty-seven) என்று மாற்றியமைக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு மே 16 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பில், நாடாளுமன்றம் கூட்டத் தொடரில் இல்லை என்றும், குடியரசுத் தலைவரின் உடனடி நடவடிக்கை தேவைப் படும் சூழ்நிலைகள் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படும்; நாடாளுமன்றம் மீண்டும் கூடிய 6 வாரங்களுக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படா விட்டாலோ அல்லது இரு அவைகளும் இதனை நிராகரித்தாலோ இது செயலற்றுப் போகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்