TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த CCUS கள ஆய்வகம்

May 19 , 2026 13 days 88 0
  • 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) கள ஆய்வக வசதி இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT) மும்பையில் திறந்து வைக்கப்பட்டது.
  • இந்த வசதி கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை, கார்பன் பயன்பாடு மற்றும் நிரந்தரப் புவியியல் கார்பன் டை ஆக்சைடு (CO) சேமிப்புடன் ஒருங்கிணைக்கிறது.
  • இந்தத் திட்டம் இந்தியாவின் 'பஞ்சாமிர்த' பருவநிலை அர்ப்பணிப்புகள் மற்றும் நீண்ட கால நிகர-பூஜ்ய உமிழ்வு இலக்குகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • இந்த ஆய்வகம் குடிநீராகப் பயன்படுத்த முடியாத நீரைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தி, அவற்றைத் தொழில்துறை தர கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.
  • தக்காணப் பொறி பசால்ட் பாறை அமைப்புகளில் கார்பன் டை ஆக்சைடு சேமிப்புத் திறனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் சோதனை அளவிலான அறிவியல் பூர்வ துளையிடும் முயற்சியும் இத்திட்டத்தில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்