பன்முகக் கூட்டுறவு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
சர்வதேச நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது.
இந்தியா, ஈரான், கியூபா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தன.
இந்தியா மற்றும் கியூபா நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையே வழக்கமான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் BRICS இந்தியா 2026 ஆம் ஆண்டிற்கான தலைமைத்துவ செயல் பாடுகளின் ஒரு பகுதியாக இந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டமானது இந்தியாவில் நடத்தப்பட்டது.