அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) சமீபத்தில் "sustainable food systems" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் சுமார் 11 சதவீதம் ஆனது வேளாண்மை, கால்நடைகள் மற்றும் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டிலிருந்து வெளியானது.
இந்தியாவில் மழைக் காலத்தினைச் சார்ந்து பயிரிடப்படும் நெல் சாகுபடியின் மகசூல் 2050 ஆம் ஆண்டில் 20 சதவீதமும், தகவமைப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2080 ஆம் ஆண்டில் 47 சதவீதமும் குறையக்கூடும்.
அதே காரணிகளின் கீழ் பாசன வசதி கொண்ட நெல் சாகுபடியின் மகசூல் 2050 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமும், 2080 ஆம் ஆண்டில் 5 சதவீதமும் குறையக்கூடும்.
இந்தியாவின் 573 கிராமப்புற மாவட்டங்களில் சுமார் 90 சதவீதம் பூச்சி தாக்குதல்கள், நோய்கள் மற்றும் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் சீரற்ற பருவமழைப் பொழிவுகள் உள்ளிட்ட பருவநிலை அபாயங்களை எதிர்கொள்கின்றன.
CSE அறிக்கை குறைவான உள்ளீட்டுத் தேவை உள்ள வேளாண்மை, பல வகை பயிர் சாகுபடிக்கான விருப்பத் தேர்வுகள் கொண்ட பயிர்ச் சாகுபடி, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் பருவநிலை தகவமைவு கொண்ட பயிர்கள் மற்றும் நுகர்வோர் விருப்பத் தேர்வுகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தியைச் சீரமைத்தல் ஆகியவற்றைப் பரிந்துரை செய்கிறது.
"Missing from the Plate: Edible Plants in Wetlands Lose Favour" என்ற இரண்டாவது அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இது உண்ணக் கூடிய ஈரநிலத் தாவரங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மீள்தன்மைக்கு அவற்றின் வெகு சாத்தியமானப் பங்களிப்பை ஆவணப் படுத்துகிறது.