மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்கள் உமாங் செயலியின் சர்வதேசப் பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
இது ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றில் தொடங்கப் பட்டு உள்ளது.
உமாங் (Unified Mobile Application for New-age Governance/UMANG) என்பது புதிய காலத்தியஆளுகைக்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலி என்பதைக் குறிக்கின்றது.
இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.