TNPSC Thervupettagam

உமிழ்வு இடைவெளி அறிக்கை 2025

November 16 , 2025 5 days 51 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP) 2025 ஆம் ஆண்டு உமிழ்வு இடைவெளி அறிக்கையை வெளியிட்டது.
  • 2023–24 ஆம் ஆண்டில், 165 மில்லியன் டன் உமிழ்வுடன் உலகளவில் இந்தியாவின் பசுமை இல்ல வாயு உமிழ்வில் மிக அதிக அறுதி அதிகரிப்பு பதிவானது.
  • அதிக வருடாந்திர உயர்வு இருந்த போதிலும், இந்தியாவின் தனிநபர் உமிழ்வு முக்கியப் பொருளாதாரங்களில் மிகக் குறைவாகவே இருந்தது.
  • தற்போதைய உலகளாவிய கொள்கைகள் நூற்றாண்டின் இறுதிக்குள் தோராயமாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது.
  • இருபது (G20) முக்கியப் பொருளாதாரங்களின் குழுவில் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே உமிழ்வினைக் குறைத்து வருவதாக அறிக்கை கூறியது.
  • போதுமான தணிப்பு முன்னெடுப்புகள் எதுவும் இல்லாததால் உலக வெப்பநிலைத் தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று இந்த அறிக்கை எச்சரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்