TNPSC Thervupettagam

நில இடைவெளி அறிக்கை 2025

November 17 , 2025 4 days 38 0
  • தோராயமாக 1.01 பில்லியன் ஹெக்டர் பரப்பிலான நிலத்தை நில அடிப்படையிலான கார்பன் அகற்றுதலுக்கு (LBCR) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • LBCR என்பது காடுகள், மண், ஈரநிலங்கள் மற்றும் வேளாண் நிலப்பரப்புகள் போன்ற நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி சேமிக்கும் உத்திகளைக் குறிக்கிறது.
  • முக்கிய LBCR முறைகளில் மீள் வனமாக்கம் மற்றும் காடு வளர்ப்பு மற்றும் மண்-கார்பன் பிரித்தெடுத்தல் ஆகியவை அடங்கும்.
  • கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்புடன் கூடிய உயிரி ஆற்றல் (BECCS), புவியியல் கார்பன் பிரித்தெடுத்தல், கரிமக் கரி மற்றும் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆகியவை பிற முறைகளில் அடங்கும்.
  • LBCR உத்தியினை பெரிய அளவில் சார்ந்திருப்பது உணவு உற்பத்தியை இடமாற்றம் செய்யலாம் என்பதோடு, பல்லுயிரியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் மற்றும் வாழ்வாதாரங்களைச் சீர்குலைக்கலாம், குறிப்பிடத்தக்க சமூக மற்றும் சுற்றுச்சூழல் வர்த்தகப் பரிமாற்றங்களை உருவாக்கலாம்.
  • காடழிப்பை நிறுத்துவதற்கான உறுதிமொழிகள் இதில் இருந்தபோதிலும், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர் காடுகள் இழக்கப் படலாம் அல்லது சீரழிக்கப்படலாம் என்பதை வன இடைவெளி காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்