சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) உலகளாவிய எரிசக்திப் போக்குகள், உமிழ்வு மற்றும் பாதுகாப்பை விவரிக்கும் 2025 ஆம் ஆண்டு உலக எரிசக்தி கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையில் மூன்று சூழல்கள் உள்ளன:
தற்போதைய கொள்கைகள் சூழல் (CPS),
அறிவிக்கப்பட்ட கொள்கைகள் சூழல் (STEPS), மற்றும்
2050 ஆம் ஆண்டில் நிகர சுழி உமிழ்வுகள் (NZE) சூழல்கள்.
CPS சூழலின் கீழ், 2050 ஆம் ஆண்டிற்குள் எண்ணெய்த் தேவை ஒரு நாளைக்கு 113 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கிறது என்பதோடுமேலும் 2035 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய எரிசக்தி தேவை 90 எக்ஸாஜூல்கள் அதிகரிக்கிறது.
அனைத்துச் சூழல்களும் உலக வெப்பநிலை 1.5°C அளவைத் தாண்டும் என்பதைக் காட்டுகின்றன என்ற நிலையில் CPS ஆனது 2100 ஆம் ஆண்டிற்குள் சுமார் 3°C வெப்ப மயமாதலுக்கு வழி வகுக்கிறது.
இங்கு பெரும்பாலும் சீனா ஒரு நாடாக 20 முக்கிய கனிமங்களில் 19 கனிமங்களைச் சுத்திகரிகிறது என்ற ஒரு நிலையில், முக்கிய கனிமங்களுக்கான முக்கிய விநியோகச் சங்கிலி மீதான அபாயங்களை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தக் கனிமங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்றுமதியை சார்ந்து அதன் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளன என்ற நிலையில்இது உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு அபாயங்களை அதிகரிக்கிறது.