உயர்புகழ் நிறுவனங்கள் என்ற தகுதியை ஏற்றுக் கொள்வதற்கான முடிவை தில்லிப் பல்கலைக்கழகம் தள்ளி வைப்பு
November 9 , 2019 2099 days 622 0
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தில்லிப் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக் கழகம், மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றிற்கு “உயர்புகழ் (மாண்புமிகு) நிறுவனங்கள்” (Institute of Eminence' - IoE) என்ற தகுதியை வழங்கியுள்ளது.
IoE என்ற தகுதி பெற்ற நிறுவனங்கள் பல்கலைக் கழக மானியக் குழுவினால் UGC (UGC - University Grants Commission) மேற்கொள்ளப் படும் ஆய்விற்கு உட்படுத்தப்பட மாட்டாது.
உயர்புகழ் நிறுவனங்கள் என்ற தகுதியை வைத்துள்ள அரசுப் பொது நிறுவனங்களுக்கு ரூ 1,000 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படும். அதே வேளையில், “உயர்புகழ் நிறுவனங்கள்” என்ற தகுதி நிலைக்குப் பரிந்துரைக்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி எதுவும் அளிக்கப்பட மாட்டாது.
ஆனால் அந்த நிறுவனங்கள் ஒரு சிறப்பு வகையாகக் கருதப்படும் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக, அதிக தன்னாட்சி உரிமையைப் பெற இருக்கின்றன.
தில்லிப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக ஆணையக் கூட்டத்தில் அப்பல்கலைக் கழகத்திற்கான “உயர்புகழ் நிறுவனங்கள்” என்ற தகுதி நிலையை ஏற்றுக் கொள்வதற்கான முடிவானது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் பல்கலைக் கழகத்தின் தனியார்மயமாக்கல் அதிகரிக்கும் என்று தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.