பஞ்சாப் மாநில சட்டப் பேரவை (தகுதி நீக்கத் தடுப்பு) திருத்த மசோதா, 2019 ஆனது பஞ்சாப் விதான் சபையால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இது அம்மாநில முதலமைச்சரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை “இரட்டை ஆதாயம் பெறும் பதவி” என்ற பிரிவின் வரம்பிற்கு வெளியே வைத்திருக்கப் பரிந்துரைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கப் படுகின்றனர்.
பஞ்சாப் அரசாங்கம் அவர்களில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காபினட் அமைச்சருக்கான தகுதியையும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு இணையமைச்சருக்கான தகுதியையும் வழங்கியுள்ளது.