TNPSC Thervupettagam

நீதி வழங்கல் குறித்த அறிக்கை

November 9 , 2019 2098 days 821 0
  • நீதி வழங்கலில் ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கான முதலாவது தர வரிசையில் 18 பெரிய - நடுத்தர மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இப்பட்டியலின் இந்தப் பிரிவில் ஜார்க்கண்ட், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
  • ஏழு சிறிய மாநிலங்களைக் கொண்ட பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய நீதி அறிக்கை 2019 என்ற அறிக்கையின் படி கூறப் பட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது சமூக நீதி மையம், காமன் காஸ் மற்றும் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு ஆகியவற்றுடன் இணைந்து டாடா அமைப்பால் வெளியிடப் பட்டது.
  • காவல் துறை, நீதித் துறை, சிறைச் சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகிய நான்கு துறைகளில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்