தேசிய நீர் மின்னாற்றல் கழகமானது, ‘உயர்மட்ட சியாங் பல்பயன்பாட்டு நீர்த் தேக்கத்திற்கான' முன் சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய மத்திய மின்சார ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நிறுவப்பட உள்ள இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாக இது இருக்கும்.
இந்த உயர்மட்ட சியாங் நிலையமானது நீர்த்தேக்கமாக செயல்படும்.
இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் நீர்மின் உற்பத்தியானது இதன் "ஒரு துணை தயாரிப்பு" மட்டுமே ஆகும்.
மெடோக் எனுமிடத்தில் சீனா நிறுவ உள்ள 60,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அணையானது பிரம்மபுத்திரா நதியிலிருந்து வரும் இயற்கையான நீரோட்டத்தின் அளவைக் குறைக்கும் என்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
சீனாவின் இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த உள்ள நிலையில், இந்த மாபெரும் நீர்த் தேக்கம் ஆனது அருணாச்சலப் பிரதேசத்திற்கும் அதன் பாசனத் தேவைகளுக்கும் அவசியமான நீர்த் தேவையினை வழங்க முடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிரம்மபுத்திரா நதியானது இந்தியாவின் மொத்த நன்னீர் வளங்களில் 30 சதவீதத்தையும், மொத்த நீர் மின் ஆற்றல் திறனில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ளது.