TNPSC Thervupettagam

பதோ பர்தேஷ் திட்டம் நிறுத்தம்

January 22 , 2023 939 days 504 0
  • மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகைத் திட்டமானது (MANF திட்டம்) சிறுபான்மை மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கிடைக்கப் பெறாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சிறுபான்மை விவகார அமைச்சகம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ முடிவிற்குப் பிறகு, சமூகத்தில் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்குமான “பதோ பர்தேஷ் திட்டத்தை” நிறுத்தியது.
  • இது 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.
  • இது சச்சார் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும்.
  • சிறுபான்மை சமூகங்களில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதோடு அவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தையும் மேம்படுத்துவதற்காக, வட்டி மானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பதோ பர்தேஷ் திட்டம், இந்தத் திட்டத்திற்கான முகமை வங்கியாக நியமிக்கப்பட்ட கனரா வங்கி மூலம் செயல்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்