TNPSC Thervupettagam

உயிரி மருத்துவ புத்தாக்க நிகழ்வு

May 29 , 2026 14 hrs 0 min 52 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR) புது தில்லியில் இந்தியாவின் மிகப் பெரிய உயிரிமருத்துவ புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்வான ‘மருத்துவ கண்டுபிடிப்புகள் காப்புரிமை மித்ரா: கண்டுபிடிப்பாளர்களைத் தொழில் துறையுடன் இணைக்கும் நிகழ்வை (I2I - Connect)’ ஏற்பாடு செய்தது.
  • உள்நாட்டு உயிரிமருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை ஆதரிப்பதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • இந்நிகழ்வின் போது, மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலுக்காக 41 பொது சுகாதார தொழில்நுட்பங்கள் தொழில்துறை பங்கீட்டாளர்களுக்கு மாற்றப்பட்டன.
  • காசநோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் (Mpox), டைபாய்டு மற்றும் பாராடைபாய்டு போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள், நோயறிதல் கருவிகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் உயிரிமருத்துவ தீர்வுகள் ஆகியவை மாற்றப்பட்ட தொழில்நுட்பங்களில் அடங்கும்.
  • இந்தியாவின் உயிரி மருத்துவ கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘இந்திய உயிரிமருத்துவ காப்புரிமை நிலப்பரப்பு அறிக்கை’ மற்றும் ‘தொழில் நுட்ப தொகுப்பு’ ஆகியவையும் வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்