உற்பத்திப் பொருள்களை மின் சந்தைப்படுத்துதல் மீதான ஒப்பந்தம்
March 7 , 2020 2415 days 852 0
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டமானது (DAY-NULM - Deendayal Antyodaya Yojana - National Urban Livelihoods Mission - DAY-NULM) அமேசான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
நாடு முழுவதும் நகர்ப் புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களால் (Self Help Groups - SHGs) தயாரிக்கப்படும் பொருட்களை மின் சந்தைப்படுத்துதலுக்காக இந்த ஒப்பந்தமானது கையெழுத்திடப் பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பானது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான பரந்த வாடிக்கையாளர் தளத்தினை விரிவுபடுத்துதல் மற்றும்
நகர்ப் புறங்களில் நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்கும் திட்டத்தை வலுப்படுத்தல்.
DAY-NULM பற்றி
இது நகர்ப்புற ஏழை மக்களின் வறுமை மற்றும் பாதிப்பைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்.
இது ஏழைகளின் வலுவான அடிமட்ட அளவிலான நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், நிலையான அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரங்களில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.