இந்த அறிக்கையானது அயர்லாந்து நாட்டின் டப்ளினில் நடைபெற்ற புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக மாநாட்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) வெளியிடப் பட்டது.
புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஆறு நிரூபிக்கப்பட்ட WHO MPOWER நடவடிக்கைகளில் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
புகையிலை ஆனது ஆண்டுதோறும் 7 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
WHO ஆனது 2008 ஆம் ஆண்டில் MPOWER உத்தியைத் தொடங்கியது.
2007 ஆம் ஆண்டு முதல், 155 நாடுகள் சிறந்த நடைமுறை நிலையில் குறைந்தது ஒரு MPOWER நடவடிக்கையை ஏற்று மேற்கொண்டன.
இந்தியா புகையிலை புகைப்பதை நிறுத்துவதற்கு உதவி வழங்குதல் மற்றும் புகையிலை ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்தல் போன்ற இரண்டு முக்கிய நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளது.
மற்ற நான்கு MPOWER உத்திகளில் இந்தியா ஒரு மிதமான முன்னேற்றத்தையே பதிவு செய்துள்ளது.