TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றம் – புதிய அறிக்கை

November 11 , 2021 1346 days 544 0
  • உலகப் பொருளாதார மன்றமானது, இந்தியாவின் ஆற்றல் பரிமாற்றத்திற்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குவதற்காக திட்டம் 2070 : நிகர சுழிய இந்தியாவிற்கான ஒரு புதியப் பசுமை ஒப்பந்தம்” என்று தலைப்பிடப்பட்ட தனது அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது 2070 ஆம் ஆண்டுக்குள் ஒரு நிகர சுழிய உமிழ்வு நிலையை அடைவதற்காக இந்தியா நிர்ணயித்த இலக்கின் பின்னணியில் வெளியிடப் பட்டது.
  • பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பரிமாற்றமானது 2030 ஆம் ஆண்டிற்குள் பொருளாதாரத் தாக்கத்தில் சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவு பங்கினை வகிக்கும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இது 50 மில்லியனுக்கு அதிகமான வேலைவாய்ப்பினை உருவாக்கும்.
  • இதன் மூலம் பொருளாதாரத் தாக்கமானது 2070 ஆம் ஆண்டுக்குள் 15 டிரில்லியன் டாலர் வரை உயரும்.
  • இந்திய நாடானது பருவநிலை மாற்றத்தின் முன்களத்தில் உள்ளது.
  • மற்ற நாட்டவர்களை விட, பருவநிலை மாற்றம் மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகளின் எதிர்மறையான விளைவுகளை இந்தியர்களே அதிகம் எதிர் கொள்ள இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்