இந்திய நாடானது 2022 ஆம் ஆண்டில் உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் (பிரான்சு நாட்டினை விஞ்சி) 2031 ஆம் ஆண்டில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் 2022 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்ற அட்டவணையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில் அமெரிக்காவினைப் பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய பொருளாதா நாடாக சீனா உருவெடுக்கும் எனவும் இந்த வருடாந்திர அட்டவணை கணித்தது.
2022 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் முதன்முறையாக 100 டிரில்லியன் டாலர் மதிப்பினை விஞ்ச இருக்கின்றது.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக, அதிக உயிரிழப்புகள் எண்ணிக்கையுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலான ஒரு கட்டத்தில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.