TNPSC Thervupettagam

உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு 2025

September 22 , 2025 15 hrs 0 min 20 0
  • இந்த அறிக்கையானது, உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டது.
  • சுவிட்சர்லாந்து 66 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சுவீடன் 62.6 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 61.7 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • சீனா 56.6 மதிப்பெண்களுடன் பத்தாவது இடத்திலும், காப்புரிமை தாக்கல்களில் முன்னணியிலும் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 48வது இடத்தில் இருந்த இந்தியா உலகளவில் 38வது இடத்தில் உள்ளது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • அறிவு மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகளில் சிறப்பானச் செயல்பாட்டுடன் இந்தியா 22வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் சந்தை நுட்பம் உலகளவில் 38வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் மிகக் குறைந்தத் தர வரிசையில் வணிக நுட்பம் (64வது இடம்), உள் கட்டமைப்பு (61வது இடம்) மற்றும் நிறுவனங்கள் (58வது இடம்) உள்ளன.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியானது 2024 ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்