TNPSC Thervupettagam

உலகளாவிய ஏரோசால் ஆய்வு மற்றும் பருவநிலை மாற்றம்

July 25 , 2026 3 days 68 0
  • உலகளாவிய ஏரோசால் (aerosol) பன்முகத்தன்மை குறித்த ஆய்வில், தெற்காசியா மாசுகளுடன் கலந்த தூசியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப் பட்டு உள்ளது என்பதோடு இது அதிகப்படியான ஏரோசால் கதிர்வீச்சு விசை (ARF) மற்றும் வளிமண்டல வெப்பத்தை ஏற்படுத்துகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் இயங்கும் பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) மற்றும் நைனிடால் ஆரியபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.
  • ஆராய்ச்சியாளர்கள் ஆறு கண்டங்களில் உள்ள 171 ஏரோசால் ரோபோடிக்/இயந்திர வலையமைப்பு (AERONET) கண்காணிப்பு நிலையங்களிலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலான ஏரோசால் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.
  • தூய்மையான தூசு, தூசு ஆதிக்கம் செலுத்தும் கலவைகள், மாசு ஆதிக்கம் செலுத்தும் கலவைகள் மற்றும் வலுவாக உறிஞ்சும் ஏரோசால்கள் உட்பட ஏழு வகையான ஏரோசால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • கருப்பு கார்பன் (black carbon) கொண்டவை போன்ற வலுவாக உறிஞ்சும் ஏரோசால்கள், வளிமண்டல வெப்பமடைதலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு பருவநிலை அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்