TNPSC Thervupettagam

உலகளாவிய சுழற்சிப் பொருளாதார மன்றம் 2026

September 20 , 2026 5 hrs 0 min 19 0
  • 10-வது உலகளாவிய சுழற்சிப் பொருளாதார மன்றம் (WCEF) 2026 ஆனது குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இது தெற்காசியாவில் நடைபெற்ற முதல் WCEF ஆகும்.
  • இதன் மையக்கருத்துரு Circular Economy: Transition for People and Prosperity என்பதாகும்.
  • இந்த மன்றமானது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, மேலும் இது மறுபயன்பாடு, பழுதுபார்த்தல், மறு உற்பத்தி, மறுசுழற்சி மற்றும் வளத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • 2026 ஆம் ஆண்டுக்கான மன்றத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB), சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), Sitra மற்றும் குஜராத் அரசு ஆகியவை குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (GPCB) ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தன.
  • சுழற்சி நிதி, நிலையான வளங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல், சுழற்சி விநியோகச் சங்கிலிகள், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR), பசுமை வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான தயாரிப்புகள் ஆகியவை இதன் முக்கியப் பகுதிகளாக அமைந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்