TNPSC Thervupettagam

உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி

September 16 , 2026 5 days 79 0
  • உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும், அளவின் அடிப்படையில் உலகளாவிய விநியோகஸ்தராகவும் இந்தியாவின் நிலையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
  • உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா சுமார் 60% பங்கைக் கொண்டுள்ளது மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழக்கமான நோய்த்தடுப்புத் தேவைகளில் 65%க்கும் மேலானவற்றை வழங்குகிறது.
  • இந்தியாவின் உயிரியல் பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் 195.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதுடன், இது ஆண்டுக்கு ஆண்டு 18% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • Ind-CEPI திட்டம் இந்தியாவின் முதல் மெசஞ்சர் ரைபோநியூக்ளிக் அமிலம் (mRNA) சார்ந்த கோவிட்-19 தடுப்பூசியான 'GEMCOVAC-19'-ஐ உருவாக்கியது.
  • உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT), உயிரித் தொழில்நுட்பத் துறை தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC) மற்றும் CEPI ஆகியவற்றின் கூட்டாண்மையானது, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தொற்றுநோய் தயார்நிலை நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
  • BRIC-THSTI பயோ அசே (Bioassay) என்றதொரு ஆய்வகமானது, உலகளாவியத் தடுப்பூசி உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் 'தொற்றுநோய் தயார்நிலைக்கான கண்டு பிடிப்புகளின் கூட்டமைப்பு' (CEPI)-இன் 17 மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் ஆய்வகங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்