TNPSC Thervupettagam

உலகளாவிய யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு 2025

July 6 , 2025 15 hrs 0 min 19 0
  • ஹுருன் அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு ஆனது ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
  • சுமார் 758 யூனிகார்ன் நிறுவனங்களுடன் அமெரிக்கா இதில் முதலிடத்தில் உள்ளது என்ற நிலைமையில் அதைத் தொடர்ந்து 343 யூனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • சான் பிரான்சிஸ்கோ உலகின் முன்னணி யூனிகார்ன் நகரமாகும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மற்றும் பெய்ஜிங் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • புத்தொழில் நிறுவனங்களின் பிரிவில் வலுவான வளர்ச்சியைக் காட்டும் வகையில் 64 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • அதிக யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்திய அளவில் பெங்களூரு முன்னணியிலும், உலகளாவிய நகரங்களில் 7வது இடத்திலும் உள்ளது.
  • மும்பை மற்றும் குருகிராம் ஆகியவை முறையே யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகளவில் 22வது மற்றும் 27வது இடங்களில் உள்ளன.
  • உலகளவில், 52 நாடுகளில் 1,523 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்