மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற 17-வது தரப்பினர்களின் மாநாட்டில் (COP17) உலகளாவிய வறட்சிக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளிக்க நாடுகள் தவறி விட்டன.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது வறட்சித் தடுப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேசியத் திட்டமிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தன்னார்வ விருப்பத் தேர்வுகள் ஆகிய இரண்டும் தீர்க்கப்படாமல் COP18 வரை ஒத்திவைக்கப்பட்டன.
பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCCD), வருடாந்திர வறட்சி மீள்திறன் மற்றும் நிலத்தை மீட்டெடுப்பதற்கான நிதி இடைவெளி $278 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது.
COP18 முதல் வறட்சியை நிரந்தரமான தனித்த நிகழ்ச்சி நிரலாக மாற்ற நாடுகள் ஒப்புக் கொண்டன.
COP18 மாநாடானது எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும்.