அசாமில் உள்ள லோகோவா வனவிலங்கு சரணாலயத்தில் அரிய வகை வலசைபோகும் வாத்தான ஸ்மேவ் (மெர்கெல்லஸ் அல்பெல்லஸ்) முதல்முறையாகக் காணப் பட்டது.
ஸ்மேவ் என்பது அனாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மூழ்கும் வகையான வாத்து ஆகும்.
இது வடக்கு யூரேசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் இல்லாத நீர்நிலைகளை நோக்கி தெற்குப் பகுதிக்கு வலசைபோகிறது.
இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (Least Concern) இனமாகப் பட்டியலிடப் பட்டு உள்ளது.
லோகோவா வனவிலங்கு சரணாலயம் நாகோன் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.