TNPSC Thervupettagam

உலகளாவிய வறட்சிக் கட்டமைப்பு

September 1 , 2026 12 days 100 0
  • மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற 17-வது தரப்பினர்களின் மாநாட்டில் (COP17) உலகளாவிய வறட்சிக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளிக்க நாடுகள் தவறி விட்டன.
  • முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது வறட்சித் தடுப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேசியத் திட்டமிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தன்னார்வ விருப்பத் தேர்வுகள் ஆகிய இரண்டும் தீர்க்கப்படாமல் COP18 வரை ஒத்திவைக்கப்பட்டன.
  • பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCCD), வருடாந்திர வறட்சி மீள்திறன் மற்றும் நிலத்தை மீட்டெடுப்பதற்கான நிதி இடைவெளி $278 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது.
  • COP18 முதல் வறட்சியை நிரந்தரமான தனித்த நிகழ்ச்சி நிரலாக மாற்ற நாடுகள் ஒப்புக் கொண்டன.
  • COP18 மாநாடானது எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்