குஜராத்தில் உள்ள கிஜாடியா பறவைகள் சரணாலயம் கருங்கழுத்து நாரைகளின் முக்கிய இனப்பெருக்க தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கருங்கழுத்து நாரை IUCN செம்பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது, ஆராய்ச்சியாளர்கள் 21–23 நாரைகள் என்ற அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்தனர்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இனப்பெருக்க காலத்தில் நான்கு கூடுகளில் எட்டு இளம் பறவைகள் உருவாகின.
அனைத்து கூடுகளும் நெல்டுமா ஜூலிஃப்ளோரா (Neltuma juliflora) என்ற மரத்தின் மீது கட்டப்பட்டிருந்தன, இது உள்நாட்டில் 'கண்டோ பவால்' என அழைக்கப்படும் ஒரு ஆக்கிரமிப்பு மரமாகும்.
கிஜாடியா பறவைகள் சரணாலயம் குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு ராம்சர் ஈரநிலப் பகுதியாகும்.