உலகின் அரிதான பெரிய நிலவாழ் பாலூட்டி இனத்தின் மரபணு
May 10 , 2025 13 days 71 0
உலகின் அரிதான மிகப்பெரிய நில வாழ் பாலூட்டி இனமான கடமான்/சாவோலாவின் (சூடோரிக்ஸ் நாகெடின்ஹென்சிஸ்) மரபணுவை அறிவியலாளர்கள் வரைபடமாக்கி உள்ளனர்.
சுமார் 5,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இனங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
அதிகபட்சக் கடைநிலைப் பனிப்பாறை பரவல் காலத்திலும் அதற்குப் பிறகுமான காலத்தின் போது அடர்ந்த காடுகளின் பரவலில் ஏற்பட்ட சில மாற்றங்களுடன் இந்தப் பிளவு ஒன்றியது.
சாவோலா இனமானது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'மிகவும் அருகிய' ஒரு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வியட்நாம் மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள அன்னமைட் மலைத் தொடரின் மூடுபனி நிறைந்த மலைப் பகுதி காடுகளில் அவை காணப்பட்டன.