TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளர் - இந்தியா

June 29 , 2026 9 days 78 0
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நீர்வாழ் விலங்கு உற்பத்தியில் சுமார் 9% பங்குகளுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • நதிகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் இருந்து 2.2 மில்லியன் டன் உற்பத்தி செய்து, உள்நாட்டு மீன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • உலகளாவிய நீர்வாழ் உயிரி வளர்ப்பு உற்பத்தியில் சுமார் 12% பங்குகளுடன் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது.
  • மீன்வளத்துறை சுமார் 30 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதுடன், உணவுப் பாதுகாப்பு, ஏற்றுமதி மற்றும் விவசாய வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரி வளர்ப்பு உற்பத்தி சாதனை அளவாக 235 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டு உள்ளது என்பதுடன் இது முக்கியமாக நீர்வாழ் உயிரி வளர்ப்பினால் உந்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்