TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய கப்பல் மறுசுழற்சி செய்யும் நாடு - இந்தியா

June 29 , 2026 9 days 79 0
  • உலகளாவிய கப்பல் மறுசுழற்சியில் 35.4% பங்குகளுடன், இந்தியா 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய கப்பல் மறுசுழற்சி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் 1.86 மில்லியன் மொத்த டன் என்ற அளவில் இருந்த கப்பல் மறு சுழற்சி, 2025 ஆம் ஆண்டில் 2.99 மில்லியன் மொத்த டன்னாக அதிகரித்து இந்தியா மறு சுழற்சி செய்துள்ளது.
  • குஜராத்தில் உள்ள அலங் கப்பல் மறுசுழற்சி தளம் உலகின் மிகப்பெரிய கப்பல் மறு சுழற்சி வசதிகளில் ஒன்றாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் கப்பல்கள் மறுசுழற்சிச் சட்டமானது, பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சூழல் ரீதியாக முறையான கப்பல் மறுசுழற்சிக்கான ஹாங்காங் சர்வதேச மாநாட்டுடன் இந்தியாவின் கப்பல் மறுசுழற்சி விதிகளை ஒருங்கிணைக்கிறது.
  • இந்தியா இந்த மாநாட்டிற்கு 2019 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது, மேலும் இது 2025 ஆம் ஆண்டு ஜூன் 26 முதல் கட்டாயமாக்கப்பட்டது.
  • இந்திய கடல்சார் தொலைநோக்கு 2030-இன் கீழ், தனது கப்பல் மறுசுழற்சி திறனை 9 மில்லியன் இலகு இடப்பெயர்வு டன்களாக (LDT) விரிவுபடுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்