ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆனது 2025 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவியில் 1.46 பில்லியன் டாலரைப் பங்களித்தது.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நன்கொடையாளர் நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தினை இடம் பெறச் செய்தது.
இந்தத் தரவரிசையை, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN OCHA) உறுதிப்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையால் பதிவு செய்யப்பட்ட, 20.28 பில்லியன் டாலரை எட்டிய மொத்த உலகளாவியப் பங்களிப்புகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்பு 7.2% ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியைப் பெற்ற முக்கிய நாடுகளில் பாலஸ்தீனம், சூடான், சிரியா, உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும்.
இந்த உதவியில் உணவு, மருந்து மற்றும் தங்குமிடம் போன்ற உடனடி நிவாரணமும், சுகாதாரம், கல்வி, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நீண்டகால மேம்பாடு ஆகியவை அடங்கும்.