சண்டிகரில் அமைந்துள்ள ‘ஜுப்பிடைஸ் ஜஸ்டீஸ் டெக்னாலஜீஸ்’ எனும் தொடக்க நிறுவனமானது உலகின் முதலாவது தனியார் டிஜிட்டல் நீதிமன்றத்தினை (தொடர் சங்கிலி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன்) தொடங்கி உள்ளது.
தனியார் நீதி அமைப்பின் கீழ் மோதல்களுக்கு மாற்று வழியில் தீர்வு காணும் முறையின் (Alternative Dispute Redressal - ADR) மூலம் மோதல்களுக்குத் தீர்வு காணச் செய்வதற்காக இந்த நீதிமன்றமானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளமானது நடுவர் தீர்ப்பாயம், சமரசம், மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தை போன்ற தனியார் நீதி முறைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்ட பிரிவனர் ஒரு நிர்வாக அமைப்பினுடைய உதவியின்றித் தீர்ப்பு வழங்குதல், சமரசம் (அ) மத்தியஸ்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு இந்தத் தளம் வழி வகுக்கிறது.
ஜுப்பிடைஸ் தளத்தின் மூலம் பெற்ற இணையதள தீர்ப்பானது ஒரு நீதிமன்றத்தின் ஆணையைப் போன்றே சட்டப்படி செயல்படுத்தக் கூடியது ஆகும்.