ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் தனது “உலக இராணுவச் செலவினங்களின் போக்கு” என்ற அறிக்கையினை வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்களை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியனவாகும்.
உலகளாவிய இராணுவச் செலவினங்களில் இந்த நாடுகளின் பங்கு மட்டும் 62% ஆகும்.
இந்தியாவின் இராணுவச் செலவினம் 2.1 சதவீதமும், சீனாவின் இராணுவச் செலவினம் 1.9 சதவீதமும், மற்றும் அமெரிக்காவின் இராணுவச் செலவினம் 4.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.