ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ இயங்குதளங்கள் மற்றும் மின்னணு வழியில் கற்றலுக்கான புத்தாக்க நிறுவனமான பைஜுஸ் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் டைம் இதழ் முதல்முறையாக வெளியிடும் 100 செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
‘Disruptors’ என்ற பிரிவில் டெஸ்லா, ஹீவாவே, சாப்பிஃபை, எர்பிஎன்பி மற்றும் டிடி சூசிங் ஆகியவற்றுடன் பைஜுசும் பட்டியலிடப் பட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்கள் பிரிவில் சூம், அடிடாஸ், டிக்டாக், ஐகியா, மோடேர்னா மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ இயங்குதளமும் பட்டியலிடப் பட்டுள்ளது.