உலக மக்கள்தொகையில் பாதி அளவினர் எடை குறைந்தவர்களாகவோ, அதிக எடை உள்ளவர்களாகவோ அல்லது உடல் பருமன் உடையவர்களாகவோ உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கையானது 2013 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு தன்னிச்சையானக் கணக்கெடுப்பு ஆகும்.
இளம்பருவத்தினரிடையே நிகழும் உயிரிழப்புகளில் கால்பகுதி ஆனது மோசமான உணவு முறையால் நிகழ்வதாக இந்தத் தரவுகள் கூறுகின்றன.
உலக சுகாதார அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட 6 உலக ஊட்டச்சத்து இலக்குகளில் 5 இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கான பாதையில் உலக நாடுகள் செயல்பட வில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது, உணவு உற்பத்தியினால் உலகின் மொத்தப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் மூன்றில் ஒரு பங்கு வெளியிடப்படுகிறது.
உணவில் செந்நிற இறைச்சியின் பயன்பாடானது தாவரம் சார்ந்த உணவுகளை விட தோராயமாக 100 மடங்கு அதிக உமிழ்வினை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் செந்நிற இறைச்சியின் உபயோகம் அதிகரித்து வருகிறது.