TNPSC Thervupettagam

உலக எதிர்காலத் திறன் குறியீடு

June 26 , 2026 6 hrs 0 min 34 0
  • QS Quacquarelli Symonds நிறுவனத்தால் 2026 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று வெளியிடப் பட்ட 'QS உலக எதிர்கால திறன் குறியீடு 2027'-இல், செயற்கை நுண்ணறிவு-பொருளாதார தயார்நிலையில் இந்தியா உலகளவில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 100-க்கு 89.4 மதிப்பெண்களைப் பெற்றதுடன், பணியின் எதிர்காலம் என்ற பிரிவில் 96.0 மதிப்பெண்களுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீடானது எதிர்கால திறன்களுக்கான தயார்நிலை மற்றும் AI-உந்துதல் பொருளாதார மாற்றத்தின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிடுகிறது.
  • பொருளாதார மாற்றம் மற்றும் கல்வி தயார்நிலை ஆகியவற்றில் இந்தியா வலுவான செயல்திறனைக் காட்டியுள்ளது.
  • AI பயன்பாடானது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கக் கூடும் என இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்