TNPSC Thervupettagam

உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலை அறிக்கை 2026

June 25 , 2026 7 hrs 0 min 56 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, Blue Transformation: Turning Vision into Impact என்ற கருத்துருவின் கீழ் உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலை (SOFIA) 2026 என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • FAO-வின் நீலப் புரட்சி தொலைநோக்குப் பார்வை (2021) என்பது நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கம், திறமையான மீன்வள மேலாண்மை மற்றும் உள்ளடக்கிய மதிப்புத் தொடர்கள் மூலம் நீர்வாழ் உணவு அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய நீர்வாழ் உற்பத்தி சாதனை அளவாக 235 மில்லியன் டன்களை (2024) எட்டியுள்ளது என்பதோடு இதில் மொத்த நீர்வாழ் விலங்கு உற்பத்தியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு 53% பங்களிக்கிறது.
  • நிலையான முறையில் நிர்வகிக்கப்படும் மீன் இருப்புகளின் பங்கு 64.5% (2021) -இலிருந்து 62.4% (2023) ஆகக் குறைந்துள்ளது, இது கடல் வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறிக்கிறது.
  • உலகளாவிய நீர்வாழ் உற்பத்தியில் (2024) 9% பங்களிப்புடன் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா உலகளவில் 2-வது இடத்தில் உள்ளது என்பதோடு மேலும், இது உள்நாட்டு மீன்பிடிப்பு உற்பத்தியில் மிகப்பெரிய நாடாகும்.
  • பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) போன்ற திட்டங்களின் ஆதரவுடன், உலகளாவிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தியில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி இந்தியா 2-வது மிகப்பெரிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு நாடாகவும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்