TNPSC Thervupettagam

எரிசக்தி மாற்றக் குறியீடு 2026

June 24 , 2026 2 days 86 0
  • உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சவால்களை எடுத்துரைக்கும் வகையில், Accenture நிறுவனத்துடன் இணைந்து உலகப் பொருளாதார மன்றமானது 'எரிசக்தி மாற்றம் குறியீடு (ETI) 2026'ஐ வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு பாதுகாப்பான, நிலையான மற்றும் சமத்துவமான எரிசக்தி அமைப்புகளை நோக்கிய நாடுகளின் முன்னேற்றத்தையும், எதிர்கால எரிசக்தி மாற்றத்திற்கான அவற்றின் தயார் நிலையையும் அளவிடுகிறது.
  • உலகளவில் இந்தியா 70வது இடத்தைப் பிடித்துள்ளதுடன் இது முந்தைய ஆண்டை விட 2 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதுடன், எரிசக்தி மாற்றத் தயார் நிலையில் உலக அளவில் வலுவான முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், மின் கட்டமைப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு, பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்புகள் மற்றும் நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பில் அதிகரித்த முதலீடு ஆகியவற்றால் இந்தியாவின் இந்த முன்னேற்றம் உந்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு 44 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி 120 நாடுகளை மதிப்பிடுகிறது என்ற நிலையில் இதில் மதிப்பெண்கள் அமைப்பின் செயல்திறன் (60%) மற்றும் மாற்றத்திற்கான தயார் நிலை (40%) ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப் படுகின்றன.
  • உலகளாவிய ETI 2026 தரவரிசையில் ஸ்வீடன், பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்