TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் 2026 - மே 18

May 20 , 2026 13 days 112 0
  • எச்.ஐ.வி (HIV - மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்) தடுப்பூசியின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எச்.ஐ.வி என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும் என்ற நிலையில் இதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் எய்ட்ஸ் (AIDS) நோய்க்கு வழி வகுக்கும்.
  • இந்த நாள் 'எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம்' என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது எச்.ஐ.வி தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைக் கௌரவிக்கிறது.
  • பயனுள்ள எச்.ஐ.வி தடுப்பூசியின் தேவையை வலியுறுத்தி 1997 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் ஆற்றிய உரைக்குப் பிறகு இந்த நாள் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
  • முதல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் 18 மே 1998 அன்று கொண்டாடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்