TNPSC Thervupettagam

உலக கடல் உணவு மாநாடு 2026

February 6 , 2026 12 days 51 0
  • இந்தியா முதன்முறையாக 2026 ஆம் ஆண்டுக்கான உலக கடல் உணவு மாநாட்டை (WSC) சென்னையில் நடத்தவுள்ளது.
  • உலக கடல் உணவு மாநாடு என்பது மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு உலகளாவிய கூடுகையாகும்.
  • WSC 2026 மாநாட்டை சர்வதேச மீன் ஆய்வாளர்கள் சங்கம், பிடிஏ வென்ச்சர்ஸ் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
  • உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் ஆதரவுடன், மீன்வளத் துறையால் இது இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இந்த மாநாடு நீடித்த கடல் உணவு வர்த்தகம், மீன்பிடித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்