உலக சுகாதார உச்சி மாநாடானது ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.
"From Crisis to Resilience: Innovating for Health” என்பது இதன் கருத்துருவாகும்.
பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை வங்காள தேசம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB) அறிவித்துள்ளன, இதன் மூலம் 47 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஒரு தசாப்தத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் இறப்புகளை 50% குறைப்பதை இலக்காகக் கொண்டு 100 மில்லியன் டாலர் நிதியுடன், உஸிமா: ஒரு பிரசவ இறப்பு தடுப்புத் திட்டத்தை கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் வெல்கம் லீப் ஆகியவை தொடங்கின.
தாய் மற்றும் சேய் சுகாதாரத்தை ஆதரிப்பதற்காக உலகளாவிய நிதியளிப்பு வசதி (GFF) மூலம் 10 மில்லியன் யூரோக்களை ஜெர்மனி உறுதியளித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு, அணுக்கரு போர், அறிவியலில் குறைந்து வரும் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வு ஆகியவை குறித்த முக்கிய விவாதங்கள் இதில் அடங்கும்.