TNPSC Thervupettagam
December 7 , 2025 24 days 125 0
  • சுவீடனின் அர்மண்ட் டுப்லாண்டிஸ் மற்றும் அமெரிக்காவின் சிட்னி மெக்லாஃப்லின்-லெவ்ரோன் ஆகியோர் 2025 ஆம் ஆண்டின் சிறந்த உலக தடகள வீரர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
  • ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னிலை வகித்ததற்காக உலகத் தடகள அமைப்பினால் இந்த விருதுகள் வழங்கப் பட்டன.
  • தடியூண்றித் தாண்டுதல் வீரரான டுப்லாண்டிஸ், 6.30 மீட்டர் தூரம் தாண்டி, 2025 ஆம் ஆண்டில், நான்கு முறை படைக்கப்பட்ட தனது சொந்த உலகச் சாதனையை தாமே முறியடித்தார்.
  • அவர் பங்கேற்ற 16 போட்டிகளிலும் தோற்காமல், அவரது ஐந்தாவது தொடர் டைமண்ட் லீக் பட்டத்தை வென்றார்.
  • உலகச் சாம்பியன்ஷிப்பில் மெக்லாஃப்லின்-லெவ்ரோன் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 47.78 வினாடிகளில் நிறைவு செய்தார்.
  • விருது பெற்ற மற்ற வீரர்களில் நிக்கோலா ஒலிஸ்லேகர்ஸ் (உயரம் தாண்டுதல்), இம்மானுவேல் வான்யோனி (800 மீ), மரியா பெரெஸ் (20 கிமீ & 35 கிமீ பந்தய நடை), மற்றும் செபாஸ்டியன் சாவ் (மராத்தான்) ஆகியோர் அடங்குவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்