உலக நீரிழிவு நோய் மருந்து தொழில்துறை குறித்த கண்ணோட்ட அறிக்கை 2023
October 13 , 2023 800 days 441 0
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 40 சதவீதம் பேருக்குத் தங்களுக்கு இந்த நோய்ப் பாதிப்பு இருப்பது குறித்து அறியாதுள்ளதால் அவர்கள் அந்த நோய் இருப்பது குறித்து பரிசோதனை செய்யாமல் உள்ளனர்.
கண்டறியப்படாத நோய்ப் பாதிப்புகளில் பெரும்பாலானவை சில பகுதிகளில் அதிகம் பதிவாகியுள்ள நிலையில் ஆப்பிரிக்கா 60 சதவிகித அளவிலானப் பாதிப்புகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 57 சதவீதத்துடன் தென்கிழக்கு ஆசியாவும், 56 சதவீதத்துடன் மேற்கு பசிபிக் பகுதியும் இடம் பெற்றுள்ளன.
2021 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 7 மில்லியன் உயிரிழப்புகள் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், உலகளவில் சுமார் 970 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதன் சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளன.
நீரிழிவு நோய் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லது உலகளவில் 55 சதவீதம் நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன.