11வது உலகப் பசுமை பொருளாதார உச்சி மாநாடு (WGES) ஆனது, ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Innovating for Impact: Accelerating the Future of the Green Economy" என்பதாகும்.
இந்த உச்சி மாநாடு ஆனது நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சியுடன் (WETEX 2025) நடைபெற்றது.
இந்த உச்சி மாநாடு ஆனது தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, கொள்கைக் கட்டமைப்புகள், பருவநிலை நிதி, சமத்துவம் மற்றும் இளையோர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இந்த உச்சி மாநாட்டின் போது, பசுமைப் பொருளாதாரத்திற்கான உலகளாவியக் கூட்டணி (GAGE) ஆனது 2024–2025 ஆம் ஆண்டிற்கான அதன் முன்னெடுப்புகளின் தொகுப்பை வெளியிட்டது.